Pages

Sunday, 27 May 2018

AVVAIYAR: NALVAZHI நல்வழி

Sunday, 27 May 2018


2018 0527 21  Avvaiyar: Nalvazhi நல்வழி 




வெண்பா : 2
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி.
Transliteration 
saadhi irandozhiya verillai saarrungaal
neethi vazhuvaa nerimuraiyin methiniyil
ittaar periyaar idaathaar izhikulaththaar
pattaangil ulla padi

விளக்கம் 
உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.

English Translation
There are only two classes of people on this earth
based on the principle of natural justice
Those who give belong to the upper class
and those who do not belong to the lower.



வெண்பா : 5
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
விளக்கம் 
நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.

Transliteration 
varunthi azhaiththaalum vaaraatha vaaraa
porunthuvana poamin endraal poagaa irunthengi
nenjam punnaaga nedunthooram thaamninaindhu
thunjuvathe maanthar thozhil

English Translation
The things that you desire, you will not get,
The things that you want rid of, will not go away
It is fate, but the nature of mankind is to worry long
till the heart aches and the body suffers.


                               

                                 



https://www.youtube.com/watch?v=qhwcmFqIVY8






https://www.youtube.com/watch?v=wujJHMfL1kU





  



Sunday, 20 May 2018

AVVAIYAR: MOOTHURAI மூதுரை

2018 0520 20  Avvaiyar: Moothurai ஔவையார்: மூதுரை
http://e3general.blogspot.in/2017/12/moothurai-translation-free-english.html





Avvaiyar's Moothurai (Time honoured wisdom ) in English

Avvaiyar was an exceptional poetess who poured out percepts and dictums
that are relevant even to this date.

Here are a few samples of Avvaiyar's 'Time honoured wisdom' (Moothurai): 


மூதுரை - ஒளவையார்


கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

Invocation 

Those who take unswerving refuge  .. ..
at the snouted Lord's feet would be blessed 
with solace, good soul and the grace of ..
Laskhmi the goddess of wealth 

நூல்

1.நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

Verses 

Never expect gratitude shown to be returned
for just as a rising unweary palm tree ..
returns water taken along feet (roots ) ..
through head (coconut) - one would return gratitude 

2.நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

Help given to grateful people are 
like an etch on  a rock - opposed to it...
help given  to insensitive people 
are  a writing on water 

3.இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.  

Affluence accrued in old age can not
relieve poverty suffered in youth
Similarly a nubile woman sans a lover
is like a flower bloomed past season 

4.அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.  

Overheated milk never loses taste 
A debauch will never be a good friend  
Noble men remain noble even in penury
like conch shells remain white even when burnt 

5.அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.  

Recurrent attempts don't succeed 
until the right time comes 
Even trees that grow taller don't..
bear fruits until the season comes 

6.உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.  

A person ready to lay his life- if needed...
be meek  to foes?- a load bearing column
will only break with excessive load ..
it would never bend or arc 

7.நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.  

Just as lily rises to the level of water in a tank
One’s knowledge depends on the books he reads
One’s wealth depends on his previous birth’s virtues
One’s moral fibre depends on his race 

8.நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

It is good to see well-disposed people
It is good to listen to their counsels
It is good to talk about their lives ..
It is good to have them as friends


                                    


For the Full Text of Avvaiyar's Moothurai with meaning: [Click Here]
http://outshine-ga-ga.blogspot.in/2014/06/avvaiyars-moothurai-time-honoured.html



                                            


YouTube Video: Avvaiyar: Moothurai: [Click Here]
https://www.youtube.com/watch?v=Z2wuURMKiSA




                                       














Sunday, 13 May 2018

AVVAIYAR: KONDRAI VENTHAN கொன்றை வேந்தன்

2018 0513 19  Avvaiyar: Kondrai Vendan கொன்றை வேந்தன்

1  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
விளக்கம் 
தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
Transliteration 
Annaiyum pithavum munnari deivam
English Translation
Mother and Father are the first known Gods
2  ஆலயம் தொழுவது சாலவும் நன்று
விளக்கம் 
கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
Transliteration 
Aalayam thozhuvadhu saalavum nandru
English Translation
It is good to visit the temple for worship.
3  இல்லறம் அல்லது நல்லறம் அன்று
விளக்கம் 
இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
Transliteration 
Il aram alladhu nal aram nandru
English Translation
Domestic life is virtuous, Anything else is not.
4  ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
விளக்கம் 
பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
Transliteration 
Eeyar thettai theeyaar kolvar
English Translation
The miser’s wealth will be taken by the wicked.
5  உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
விளக்கம் 
குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
Transliteration 
Undi surunguthal pendirkku azhaku
English Translation
The smaller the meals, the prettier the woman.
6  ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
விளக்கம் 
ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
Transliteration 
Oorudan pagaikkin verudan azhaku
English Translation
Animosity towards the community uproots the whole family.
7  எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
விளக்கம் 
அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
Transliteration 
Yennum yezhuththum kan yenath thakum
English Translation
Numbers and letterss are as worthy as the two eyes.
8  ஏவா மக்கள் மூவா மருந்து
விளக்கம் 
செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
Transliteration 
Yaevaa makkal moovaa marundhu
English Translation
Anticipation by children is panacea for parent’s ills
9  ஐயம் புகினும் செய்வன செய்
விளக்கம் 
பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
Transliteration 
Aiyam pukinum seivana sei
English Translation
Do what is right, even if reduced to begging.
10  ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
விளக்கம் 
ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
Transliteration 
Oruvanaip patri oarakaththu iru
English Translation
Marry one and be faithful to him
11  ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
விளக்கம் 
ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
Transliteration 
Oadhalin nandre vethiyarkku ozhukkam
English Translation
For priests morality is more important than chanting.
12  ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
விளக்கம் 
பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
Transliteration 
Auviyam pesudhal aakkaththirku azhivu
English Translation
Jealous words destroy one’s prosperity.
13  அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
விளக்கம் 
சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
Transliteration 
Ahkamum kasum sikkenath thirambamai
English Translation
Land and wealth should be accumulated quickly.









                                



For Full Text of Avvaiyar's Kondrai Venthan with meaning: [Click Here]
http://www.edubilla.com/tamil/konrai-venthan/


                                  



YouTube Video: Avvaiyar's Kondrai Venthan Vilakkam: [Click Here]






                                    



For Full Text of Avvaiyar Ara Noolkal ஔவையார் அற நூல்கள் : [Click Here]
http://www.valaitamil.com/avvaiyar-books-aathichudi_2946.html





                                      

Sunday, 6 May 2018

AUVAIYAR: ALPHABET APHORISMS: AATHTHI CHOODI ஆத்தி சூடி

2018 05 18  Auvaiyar : Alphabet Aphorisms ஆத்தி சூடி



அறம் செய விரும்புHave desire to do good deeds
ஆறுவது சினம்Anger should be controlled
இயல்வது கரவேல்Help to your best possible extent
ஈவது விலக்கேல்Don’t stop doing charity
உடையது விளம்பேல்Do not boast about your possession
ஊக்கமது கைவிடேல்Do not give up enthusiasm/self-confidence
எண் எழுத்து இகழேல்Do not underestimate the power of learning
ஏற்பது இகழ்ச்சிTo accept alms is a shameful act
ஐயமிட்டு உண்Before eating, share food with those who need
ஒப்புர வொழுகுAct with high moral standards
ஓதுவது ஒழியேல்Never stop learning
ஒளஒளவியம் பேசேல்Never envy / talk bad about others
அஃகஞ் சுருக்கேல்Do not be stingy in selling food grains


YouTube Video:  Avvaiyar's Alphabet Aphorisms 13 ஆத்தி சூடி: [Click Here]
https://www.youtube.com/watch?v=3Z6w6rvIWMc





                                           


For Full Text of Avvaiyar's Aatthichoodi with English meaning: [Click Here]
http://ilearntamil.com/aathichudi-english-meaning/


For Full Text of Avvaiyar Ara Noolkal ஔவையார் அற நூல்கள் : [Click Here]
http://www.valaitamil.com/avvaiyar-books-aathichudi_2946.html